நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியான கடையாலுருட்டி, சுரண்டை, சேர்ந்தமரம், ஊத்துமலை, பாண்டியாபுரம், ஈச்சந்தா, தன்னூத்து, வெள்ளாளன்குளம், குலசேகரமங்கலம், அருணாசலபுரம், அரியநாயகிபுரம், வீரசிகாமணி, குலையநேரி, குறிச்சன்பட்டி உள்பட 300க்கும் மேற்பட்ட கிராங்களில் பெரும்பான்மையான தொழில் விவசாயமாகும்.
தற்போது இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான தென்னை மற்றும் பனை மரங்கள் கருகிவிட்டன. இதனால் மரங்களை வெட்டி விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் நஞ்சை, புன்செய் நிலங்கள் வீட்டுமனையாகவும், காற்றாலை அமைப்பதற்கும் விற்று வருகின்றனர். இங்கு கால்நடைகளான ஆடு, மாடுகள் முக் கிய வளர்ப்பு தொழிலாகும். வறட்சி காரணமாக அவைகளை கேரளாவுக்கு அடி மாட்டு விலைக்கு விற்கும் நிலை உள்ளது.
வறட்சி காரணமாக செங்கல் உற்பத்தி, கால் நடை வளர்ப்பு, வியாபாரம், கட்டுமானபணிகள், மண் பானை செய்தல் ஆகிய தொழில்கள் முடங்கிவிட் டன. இப்பகுதி இளைஞர் கள் தொழில் இல்லாமல் வேலைதேடி கேரளா, ஆந்திரா, திருப்பூர் கோவை போன்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள். வறட்சியில் இருந்து விடுபட குற்றாலம், செண்பகாதேவி அருவிகளில் அணைகட்டி தண் ணீரை சேமித்து அதை குடிநீருக்கும், விவசாயத்திற் கும் பயன்படுத்தலாம். இதனால் குடிநீர் பிரச்னை தீர வழி உள்ளது. இது போல் கருப்பாநதி அணை கால்வாய் களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நிலத்தடிநீர் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.