கொடிக்காய்களில் சிறந்தது.
மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினை தருகிறது. புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு,வைட்டமின் சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன. மிக எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.பலவீனமான குடல் உள்ளவர்களும், இரவுநேரத்திலும்,பத்திய உணவாகவும் உட்க்கொள்ளலாம்.
முத்திய அவரையை விட, பிஞ்சு அவரை நல்லது.
வெண்ணிற அவரை - வாயு, பித்தம், இவற்றை கண்டிக்கும்.உள்ளுறுப்புகளின் அழற்சியை
போக்கும்.எரிச்சலை அடக்கும்.
நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணக் கோளாறு, இவற்றிற்கு அவரையை உணவில் அடிக்கடி சேர்ப்பது நல்லது.
அஸ்ஸாமில் காத்து வலிக்கும், தொண்டை வலிக்கும் அவரைக்காயின் சாரை பயன்படுத்துகிறார்கள்.
ரத்தக் கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது அண்மைய கண்டுபிடிப்பு.
அவரையைப் பற்றிய பழைய வைத்திய நூல் குறிப்பு
Saturday, November 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உங்களின் இந்த பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது எனக்கு பயனாக உள்ளது குறிப்பாக வீட்டில் தோட்டம் வைப்பது,
நான் இப்போது என் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் வைத்துள்ளேன் அதற்கு நீங்கள்தான் காரணம் மிக்க நன்றி .
Post a Comment