Tuesday, April 26, 2011

பனை நுங்கு வியாபாரம்

சுரண்டை அருகே கடையாலுருட்டி பகுதியில் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.​

சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.​ திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.​ பகல் நேரத்தில் அனல் காற்றும்,​​ இரவு நேரத்தில் புழுக்கமும் ஏற்படுகிறது.​ இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல்,​​ வெம்மையை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள்,​​ பழவகைகள் என பல வழிகளை மக்கள் நாடுகின்றனர்.​ அதேபோல் இளநீர்,​​ வெள்ளரிக்காய்,​​ தர்ப்பூசணி ஆகியவற்றையும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.​ கோடைக்காலம் என்பதால் இளநீர் ஒன்று ரூ.20 வரை விற்கப்படுகிறது.​ வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணிக்கும் குறைந்தபட்சம் ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.

நோய் தீர்க்கும் பதநீர்




பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.