சுரண்டை அருகே கடையாலுருட்டி பகுதியில் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்றும், இரவு நேரத்தில் புழுக்கமும் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், வெம்மையை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள், பழவகைகள் என பல வழிகளை மக்கள் நாடுகின்றனர். அதேபோல் இளநீர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி ஆகியவற்றையும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றனர். கோடைக்காலம் என்பதால் இளநீர் ஒன்று ரூ.20 வரை விற்கப்படுகிறது. வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணிக்கும் குறைந்தபட்சம் ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.
Tuesday, April 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment