று வயதில் மண்புழு உழவனுக்கு நண்பன் என்று படித்திருப்போம், இது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மையும் கூட, மண்புழுவை போல சில நுண்ணுயிர்களும் உழவனுக்கு நண்பனாக திகழ்கிறது
பயிருக்கு முக்கிய தேவையான உரங்களான தழை சத்து,மணி சத்து மற்றும் சாம்பல் சத்தை பெரும்பாலும் வேதி உரங்கள் மூலம் தருவதால் உற்பத்தி செலவு அதிகமாவதுடன் சுற்று சூழ்நிலை சீர்கேடும் விளைகிறது.நம் மண்ணில் இச்சத்துக்களின் அளவு குறைவாக இருப்பதால் பயிருக்கு எப்படியாவது நாம் இச்சத்துக்களை அளித்தே ஆக வேண்டும்,சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாமல் இந்த பிரச்சனையை தீர்ப்பதெப்படி?
தீர்வின் ஒரு பகுதியாக உயிர் உரங்களை நாம் பயன் படுத்தலாம்.முதலில் உயிர் உரங்கள் என்றால் என்ன என்று பார்ப்போம்.
மண்ணில் வாழும் நுண்ணியிரிகளில் சில வகை நுண்ணியிரிகள் நன்மை செய்யும் நுண்ணியிரிகள்.
இவற்றில் சில வகை நுண்ணியிர்கள் பயிருக்கு தேவையான தழை சத்தை வளிமண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை.
சில நுண்ணியிரிகலோ மண்ணில் பயிருக்கு பயன் படாத வகையில் இருக்கும் சத்தை பயன் படும் வகையில் மாற்றி கொடுக்கும்.
வேறு சில நுண்ணியிரிகலோ பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்
தழைசத்து(Nitrogen) கொடுக்கும் நுண்ணுயிர் உரம்வளி மண்டலத்தில் 78% தழை சத்து இருந்தாலும் பயிரால் வளைமண்டலத்தில் உள்ள தழை சத்தை எடுத்து உபயோக படுத்த முடியாது. இந்திய மண்ணிலும் தழை சத்து மிக குறைவாகவே உள்ளது. இதை சரி செய்ய யூரியா போனற உரங்களை இடுகிறோம். மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை நிலை படுத்தி பயிருக்கு உரமாக தருகிறது.
இவற்றில் முக்கியமானது
ரைசோபியம். இது பயிறு வகை செடிகளின் வேர்களின் உள்ளே முடிச்சி ஏற்படுத்தி அதனுள் வழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணியிர் இரண்டும் பயனடைவர். நுண்ணியிரிக்கு உணவும் இருக்க இடமும் கிடைக்கின்றது. அதனுள் வாழும் ரைசோபியம் வளி மண்டலத்தில் உள்ள தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கிடைக்கிறது. இதனால் அந்த பயிர் மட்டுமன்றி அந்த பயிர் இறந்த பிறகு அதன் வேரில் இருக்கும் தழை சத்தால் அடுத்து வரும் பயிர்கள் கூட பயனடைகிறது. செஸ்பேனியா போன்ற தழை உரத்திற்காக வளர்க்க படும் செடிகளின் தண்டு பகுதியில் கூட இவ்வகை உயிர்கள் உரத்தை சேமிக்கின்றன.
அசோஸ்பிரில்லம் என்ற உயிர் பெரும்பாலான பயிகளின் வேருக்கு அருகில் வளர்ந்து வளி மண்டல தழை சத்தை நிலை படுத்துவதுடன், வேர்களை நன்கு வளர செய்யும் ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.
அசிட்டோபேக்டர் என்ற நுண்ணியிர் கரும்பில் உள்ள சர்க்கரை சத்தை உணவாக உட்கொண்டு வளி மண்டல தழை சத்தை உரமாக்கி பயிருக்கு கொடுக்கும்.
நீலபச்சை பாசி என்பது பாசி வகையை சேர்ந்தது. இது நெல் வளரும் இடங்களில் நீர் தேங்கி இருப்பதால், அவ்வகை இடத்தில் தழைசத்து உரத்தை உருவாக்கி பயிருக்கு கொடுக்கும்.
அசோல்லா என்பது நீரில் வளரும் ஒரு கசடு(fern) தாவரம். இது அதிக அளவில் organic matter உருவாக்குவதுடன், இதன் இலையின் மேல் வளரும் நீலபச்சை பாசி மூலம் தழை சத்து உரத்தையும் பயிருக்கு கொடுக்கும்
மணிசத்து(phosperous) கொடுக்கும் நுண்ணியிர் உரம்மண்ணில் மணிசத்து ஒரளவிற்கு இருந்தாலும் அவை பயிர்களால் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. மண்ணில் வாழும் சில நுண்ணியிரிகள் சிலவகை அமிலவகைகளை உற்பத்தி செய்து, மண்ணில் பயிருக்கு கிடைக்காத வகையில் உள்ள மணி சத்தை கரைத்து பயிர்கள் உபயோக படுத்தும் வகையில் மாற்றி கொடுக்கிறது.
பாஸ்போபேக்டீரியா என்ற நுண்ணியிர் உரம் அனைத்து பயிர் வளரும் சூழ்நிலையிலும் வளர்ந்து மணி சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
VAM எனப்படும் பூஞ்சை வகை உயிர் பயிர்களின் வேரில் புகுந்து நீண்ட தூரம் இழை விட்டு வளர்ந்து வேர் வளரும் இடத்தை விட அதிக இடம் வளர்ந்து பயிருக்கு தேவையான மணிசத்து மற்றும் பயிருக்கு குறைந்த அளவு தேவை படும் சத்துகளையும் பயிருக்கு எடுத்து அளிக்கிறது. இவ்வகை உயிர்கள் பயிருக்கு சிறிதளவு வறட்ச்சி தாங்கும் தன்மையை அளிப்பதுடன் நோய் எதிர்ப்பு தன்மையையும் அளிக்கிறது. இது முக்கியமாக மர வகை பயிர்களின் பயன்பாட்டிற்கு உபயோக படுகிறது.
பயிர் ஊக்கி(Plant growth promoting harmones) கொடுக்கும் நுண்ணியிர் உரம்சூடோமோனாசு போன்ற நுண்ணியிர்கள் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இவை பயிர்களின் நோய் எதிர்ப்பு தன்மையை கொடுக்க கூடிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. இந்த வகை நுண்ணியிர்களை அனைத்து வகை பயிர்களுக்கும் உபயோகபடுத்தலாம்.
இது தவர வேறு சில பயிருக்கு பயன் தரும் நுண்ணியிரிகள், பயிர்களின் வளர்ச்சிக்கு உரமாக பயன் படுத்த அராய்ச்சி அளவில் உள்ளது .
இவ்வகை நுன்ணியிர் உரம் உண்மையிலேயே பயன் அளிக்கிறதா? எவ்வாறு உபயோக படுத்த வேண்டும்? அது செயல் படும் விதம் எப்படி என்பது பற்றி இனி வரும் பதிவுகளில் காணலாம்.