Monday, September 27, 2010

மாமரத்தில் விளைச்சலை அதிகரிக்க

மா மரத்தில் அதிக பூ வைத்து விளைச்சலை அதிகரிக்க ஒரு தொழில் நுட்பத்தை பார்ப்போம். இத்தொழில் நுட்பம் தமிழகத்தை சேர்ந்த தர்மபுரி மற்றும் கிருஷ்னகிரியில் விவசாயிகளால் பின் பற்ற பட்டு லாபத்தை பெருக்க உதவி வருகிறது. இத்தொழில் நுட்பத்திற்கு மட் கா காட் என்று பெயர்.எருமை மாட்டிலிருந்து பெற பட்ட பாலிலிருந்து தயாரிக்க பட்ட மோர் 15 லிட்டர் எடுத்து கொண்டு அதனுடன் 15 லிட்டர் தண்ணீரை நன்கு கலக்க வேண்டும்.அதை மண் பானையில் ஊற்றி பானையின் மேல் பகுதியை துணியால் மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும் அல்லது மண்ணுக்கு அடியில் புதைத்து 21 நாட்கள் வைக்க வேண்டும்.அவ்வாறு வைப்பதால் நுண்ணுயிர் நொதித்தலால் பல நல்ல உயிர் ஊக்கி(bioactive molecule) பொருட்கள் உருவாகும்.1 லிட்டர் இந்த கலவையுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதனால் மா மரத்தில் பூக்கள் அதிகரித்து விளைச்சளும் அதிகரிக்கிறது.

0 comments: