Monday, September 27, 2010

வேளாண்மையில் மரபணு மாற்ற தொழில் நுட்பம்(BT) - பருத்தியில் BT


பருத்தி செடியை சீரழிக்கும் கொடுமையான 3 பூச்சிக்கள் உள்ளன.அமெரிக்க காய் புழு என்று சொல்ல படும் பச்சை காய்புழு,புள்ளி காய்புழு மற்றும் இளம் சிவப்பு காய்புழு.இந்த மூன்று காய்புழுக்களுமே பருத்தியை தாக்கி பெருமளவு சேதம் விளைவிக்கிறது.உலகளவில் பருத்தி எங்கெங்கெளாம் விளைவிக்க படுகிறதோ அங்கங்கெல்லாம் இந்த காய் புழு பருத்தியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறது.

இந்த காய் புழுவை கட்டு படுத்த எவ்வளவு செலவு ஆகிறது என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.இந்தியாவில் மட்டும் 162 வகை பூச்சி வகைகள் பருத்தியை தாக்குகின்றன.இந்தியாவில் உள்ள அனைத்து பயிர்களையும் தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த பூச்சி மருந்து மட்டும் 4500 கோடி செலவு செய்ய படுகிறது. இதில் பருத்திக்கு மட்டும் ஆண்டொண்டிற்கு செலவாகிறது. பருத்தி காய் புழுவை கட்டு படுத்த மட்டும் 1100 கோடி செலவாகிறது.ஆண்டு தோறும் 1100 கோடி செலவிட்டு பூச்சி மருந்து அடித்தாலும் காய் புழுவை கட்டு படுத்த முடிகிறதா என்றால் முடிய வில்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

ஆண்டுக்கு ஆண்டு செலவு கூடுகிறதே தவிர காய் புழுவை கட்டு படுத்த முடியவில்லை. இந்த காய் புழுவிற்கு பயந்து தேனி மற்றும் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த பல விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்னால் பருத்தி விவசாயத்தையே கை விட்டு விட்டனர்.ஆத்தூர் பெரம்பலூர் பகுதிகளில் 15 - 20 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கு பார்த்தாலும் மானாவாரி நிலங்களில் பருத்தி செய்தனர்.அதிலும் குறிப்பாக RCH2 போன்ற வீரிய பருத்தி சாகுபடி செய்த போது ஏக்கருக்கு 10 - 12 குவிண்டால் மக்சூல் பெற்று பணம் குவித்தனர். ஏக்கருக்கு 6000 ரூபாய் அளவில் பூச்சி மருந்துகளை வாங்கி தெளித்தனர்.பைரித்ராய்டு போன்ற கடுமையான விஷம் உள்ள மருந்துகளை அளவின்றி தெளித்தனர். ஒரு சிறிய மருந்து கடையில் கூட 1 கோடி ரூபாய்க்கு மருந்து விற்க பட்டது. அதன் விளைவு என்ன? காய் புழு அத்தனை மருந்துகளையும் எதிர்த்து பீடு நடை போட்டு வளர்ந்து பயிரை சேதம் செய்து வந்தது. அதன் விளைவு ஏக்கருக்கு 3,4 குவிண்டால் கூட உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. விளைவு- விவசாயிகள் வேறு பயிரை சாகுபடி செய்ய தொடங்கினர்.வாழ வைத்த பருத்தி வறுமைக்கு ஆச்சாரம் போட்டது.இந்த சமயத்தில் தான் உயிரியல் தொழில் நுட்பம் வெளிவர தொடங்கியது.பருத்தி விவசாயிகளின் வழ்க்கையில் ஒளி விளக்காக வந்தது BT தொழில் நுட்பம்.

0 comments: