Friday, October 9, 2009

பருத்தி துல்லிய தொழில் நுட்ப சாகுபடி நுட்பங்கள்

மண் மற்றும் காலநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அதிகம் கொண்ட, மணல் களி கலந்த வண்டல் மண் அல்லது கரிசல் மண் கலந்த வண்டல்மண் ஏற்றது. கார அமிலத்தன்மை 5.5 - 6.0. வெப்பநிலை-25-30 டிகிரி செல்சியஸ்.

பருவம்: மே-ஜூன் முதல் அக்டோபர், டிசம்பர்- ஜனவரி முதல் மே.
விதையளவு: 2.5 கிலோ/எக்டர்.

விதைநேர்த்தி: டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் சேர்த்து வைத்து கலக்கவும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றையும் 1 பாக்கெட் வீதம் கலந்து நிழலில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

இடைவெளி மற்றும் செடி எண்ணிக்கை: பொதுவாக ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கை மாறுபடும். வரிசைக்கு வரிசை 120 செ.மீ. செடிக்கு செடி 60 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில், சொட்டு நீர் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத்தொட்டியின் மூலம் இடவேண்டும்.

பின்செய் நேர்த்தி: நடவு செய்த 30வது நாள் மற்றும் 60வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். பூ பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ 0.25 பிபிஎம் (பிளானோபிக்ஸ்) என்ற அளவில் பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: பருத்தி அறுவடை ரகங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் பருத்தி வீரிய ஒட்டுரகம்.

பரிந்துரைக்கப்படும் அளவு: 120:60:60 கிலோ எக்டருக்கு
100 சத நீர்வழி பரிந்துரை: 200:37.50:250 கிலோ/ எக்டருக்கு
75 சதம் மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் மூலம் அடியுரமிட பரிந்துரை: 112.5 கிலோ x 6.25 = 703.13 கிலோ/ எக்டருக்கு.

தொடர்புக்கு: ஸ்ரீதர், போன்: 04342-232 049.

கே.சத்யபிரபா, 4/164, எஸ்.எஸ்.காலனி, உடுமலை.

0 comments: