காய்கறி, மலர், பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல உதவிகளை செய்கிறது.
இது பற்றி திருப்பத்தூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் பா.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர் மற்றும் நாட்டறள்பள்ளி பகுதிகளில் உள்ள காய்கறி சாகுபடி செய்பவர்கள், மலர் சாகுபடி செய்பவர்கள், மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, முந்திரி சாகுபடி செய்பவர்கள் அனைவரும் தோட்டக்கலை துறை உதவியுடன் பதிவு செய்து, பயிர் சாகுபடியை அதிக லாபம் உடையதாக செய்திட உரிய வழிமுறைகளை கலந்து பேசி அரசுக்கு பரிந்துரை செய்யலாம். இதில் தோட்டக்கலை துறையின் திட்டங்களின் பயனாளிகள் முக்கிய பங்கு பெறுவர்.
ஒவ்வொரு கிராமத்திலுள் உள்ள விவசாயிகள் தாம் சாகுபடி செய்யும் பயிரை குறிப்பிட்டு, உறுப்பினராக சேர விருப்பக்கடிதத்தை நேரிலோ, தபாலிலோ, தோட்டக்கலை துறை உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். பயிர் வாரியாக உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும், அதற்குரிய சங்க தலைவர், பொருளாளர் மற்றும் சங்கம் உள்ள இடத்தின் முழு முகவரியும் அரசுக்கு அனுப்பிட அறிவுரைகள் பெறப்பட்டுள்ளது. எனவே தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment