விவசாய குடும்பங்களின் அள்ளல்களை கருத்தில் கொண்டு, AME நிறுவனத்தின் இராய்ச்சூர் வட்டார மையம், இந்த கிராமத்தை தேர்வு செய்தது. இங்குள்ள விவசாயிகள் மாற்று விவசாய முறைகளை கையாண்டு இடுபொருளின் அளவை குறைத்து, ஒரு நிலையான பயிர் சாகுபடி புரிவதற்கு வழி வகுத்தது.
விவசாயிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், பருத்தியின் மகசூலின் குறைவிற்கு பூச்சிகளே, முக்கியமாக சார் உறிஞ்சும் பூச்சி மற்றும் காய் புழுக்கள் காரணம் என்று தெரியவந்தது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த சராசரியாக, பயிருக்கு ஒன்பது தடவை பூச்சிக்கொல்லியை தெளிக்கிறார்கள். இதில் பச்சைக்காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த ஐந்து தடவையும், சார் உறிஞ்சும் பூச்சியைக் கட்டுப்படுத்த நான்கு தடவையும் பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்துகிறார்கள். சராசரியாக, ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் மகசூல் எடுப்பதற்கு பதில், 3.5 குவிண்டாலே பெறுகிறார்கள். மேலும், தரமற்ற விதைகள், காலம் தவறிய விதைப்பு, ஒழுங்கற்ற மண் மற்றம் நீர் மேலாண்மை மற்றும் குறைவான இயற்கை எரு ஆகியவற்றாலும் மகசூல் குறைவு ஏற்படுகிறது.
விவசாயிகள், தங்களுடைய பயிரை மட்டும் பார்க்காமல், பயிர் சூழலையும் கருத்தில் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்பதை உணர, விவசாய வயல்வெளிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதனால், இங்கு இவ்வழிமுறையை, 2005ல் ஜூன் - டிசம்பர் மாதங்களில் (பயிர் காலத்தில்) நடத்தினர்.
இங்கு, AMEF-ன் முயற்சியினால், பிரதாப் ரெட்டி என்பவரின் உதாரணம் கொண்டு, பொதுவான வளர்ச்சி மற்றும் குறிப்பாக பருத்தியில் ஏற்பட்ட மாற்றங்களை காணலாம். தனி ஒரு விவசாயி மற்ற சாகுபடி முறையை கையாள எடுத்துக் கொண்ட முயற்சியையும், மேலும் பிறருடன் பகிர்ந்து கொண்ட அனுபவத்தையும் இது குறிப்பிடும்.
பிரதாப் ரெட்டி என்பவர், பத்தாம் வகுப்பு வரை படித்த 35 வயது இளைஞர். லிங்காயத்து என்னும் சமூகத்தை சேர்ந்தவர், மணமாகி இரண்டு குழந்தைகளை உடையவர். இவர் தனது 16 ஏக்கர் நிலத்தை, கூலியாட்களைக் கொண்டு சாகுபடி செய்து வருகிறார். இவர், விதைகளை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கியும் பயிரில் பூச்சி தென்பட்டால், உடனே பூச்சிக் கொல்லிகளை தெளித்தும் உரங்களை இட்டும் பருத்தி சாகுபடியை செய்து வந்தார். பருத்தி வயல்வெளிப்பள்ளியில், பிரதாப் ஆர்வத்துடன் பங்கு பெறுபவர். செயல்முறைக்காக 0.75 ஏக்கர் நிலத்தை பயன்படுத்தினார். இதில் 0.50 ஏக்கரில் பரிந்துரைப்படி சாகுபடியையும், 0.25 ஏக்கரில் அவரின் வழக்கமான முறையில் சாகுபடியையும் செய்தார். வயல்வெளிப்பள்ளி மூலம் பருத்தியில் மாற்று சாகுபடி முறைகளைக் கற்றுக் கொண்டார்.
துவரையை எல்லை பயிராகவும், சாமந்தி விதைகளை நிலத்தில் ஆங்காங்கே தூவியும், வெண்டை விதைகளை 1:10 விகிதத்தில் நிலத்தில் விதைக்கவும் செய்தார். எல்லா விதைகளையும், விதைப்பதற்கு முன் உயிர்உர விதை நேர்த்தி செய்தார். விதைநேர்த்தி :
விதைகளை, சாக்கு அல்லது பேப்பரில் பரப்பி, இதன் மேல் வெல்லபாகை ஊற்றி, இதன் மேல் உயிர்உரங்களை தூவ வேண்டும். இதனை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, நேரடியாக விதைக்க வேண்டும். (பரிந்துரைப்படி, ஒரு ஏக்கர் விதைக்கு, 200 கிராம் உயிர் உரங்கள் தேவைப்பட்டாலும், விவசாயிகள் 50 கிராமே போதுமானது என்று கருதுகின்றனர்) பூச்சிமேலாண்மை: உர மேலாண்மை இம்முறைகளால், திரும்பவும், பருத்தி ஒரு இலாபகரமான பயிராக மாறியது. மாற்று சாகுபடி முறைகள், முதல் வருடத்திலேயே பருத்தி மகசூலை 20% அதிகமாகவும், நிகர வருமானத்தை 44% அதிகமாகவும் கொடுத்தது. தொழுஉரம் அளிப்பதால் சாகுபடி செலவு அதிகமானது. ஆனால், பிரதாப் தானாகவே தொழுஉரத்தை உற்பத்தி செய்வதால், பின் வரும் வருடங்களில், சாகுபடி செலவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. |
முறையான வழிநடத்துதல் மற்றும் குழுவின் ஆலோசனைகளாளும், பிரதாப் இயற்கை வளம் மேலாண்மை மற்றும் பண்ணை கழிவுகளை சுழற்சி செய்து உபயோகிப்பது போன்றவைகளில் கவனம் செலுத்தினார். தான் சென்ற கல்விச்சுற்றுலாவின் மூலம், கூடுதலான தொழுஉரம் தயாரிப்பதற்கு, கூடுதல் தழை அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் 10000 பல்உபயோக செடி கன்றுகளை தன் பண்ணையில் நட்டார். இவைகளை வரப்புகளிலும் குட்டை ஓரங்களிலும் நட்டார். மேலும், மா, புளி மற்றும் சப்போட்டா போன்ற பழப்மரங்களையும் நட்டார். பயிர் கழிவுகளின் அவசியத்தை அறிந்த பின்னர் சூரியகாந்தி குச்சிகளை எரிப்பதை நிறுத்திவிட்டு, அதனை மண்ணுக்குள் மடக்கிவிடுவார்.
மேலும், பிரதாப் கூடுதலாக மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் வீட்டுத் தோட்டம் போன்றவற்றையும் தொடங்கினார். கத்திரி, வெள்ளரி, தக்காளி, பீர்க்கன்காய் போன்றவற்றை வீட்டிலும், வெண்டையை பருத்தி நிலத்திலும் சாகுபடி செய்தார். இதனால், வீட்டுக்கு போதுமான காய்கறிகள் கிடைக்கிறது. நீரை சேமிக்க 12 அடி ஆழம் உள்ள குட்டையை தோண்டினார். குட்டையில் நீர் இருப்பதைப் பொறுத்து, மீன் வளர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment