செம்மை நெல் சாகுபடி செய்வது எப்படி என்று வேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் ஒன்றை நாற்று நடவு முறை என்றழைக்கப்படும் செம்மைநெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
செம்மை நெல் சாகுபடி முறைக்கு ஏ.டி.டி. 38, 39 போன்ற அனைத்து ரகங்களையும் பயன்படுத்தலாம். செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ சான்று பெற்ற விதை நெல் போதுமானது.
ஏக்கருக்கு ஒரு சென்ட் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து நாற்று விட்ட 12 முதல் 15 நாட்களுக்குள் 22.5 செ.மீ., க்கு 22.5 செ.மீ. என்ற இடைவெளியில் மார்க்கர் கருவி கொண்டு அடையாளமிட்டு அல்லது கயிறு பிடித்து நடவு செய்யவேண்டும்.
நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40 வது நாளில் கோனோவீடர் களை எடுக்கும் கருவியை கொண்டு களையை வயலிலேயே அமுக்கி விடவேண்டும். இதனால் களைகள் மக்கி பயிருக்கு உரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம மண்ணில் அங்ககப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது.
மேலும் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்படுகிறது. செம்மை நெல் சாகுபடி முறையில் நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது. இதோடு நல்ல சூரிய வெளிச்சமும் கிடைப்பதால் அதிக சிம்புகள் வெடிக்க ஏதுவாகிறது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும்.
சாதாரண நடவில் பத்து முதல் பதினைந்து சிம்புகள் உருவாகும். ஆனால் செம்மை நெல் சாகுபடியில் 60 முதல் 70 கதிர் பிடிக்கும் சிம்புகள் உருவாகும்.
இதனால் மகசூல் சாதாரண முறையைவிட ஏக்கருக்கு 500 முதல் 1000 கிலோ வரை கூடுதலாக மகசூல் கிடைக்கும். அதாவது ஏக்கருக்கு 16 முதல் 18 பொதிவரை மகசூல் கிடைக்கும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment