Sunday, September 27, 2009

புதிய ரகம் கத்தரி,முந்திரி,ஆமணக்கு.

புதிய கத்தரி ரகம் - கோ.பி.எச்.2.: தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திற்கும் உகந்த இப்புதிய ரகம் 120-130 நாட்களில் மகசூல் தர வல்லது. மே - அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஜுன் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. உக65 மற்றும் ணீதண்ட தttச்ட் ஆகிய ரகங் களின் ஒட்டு ரக கலவையாக வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக முந்திரி -/ விஆர்ஐ (சிடபிள்யூ) எச்.1: தமிழகத்தின் முதல் ஒட்டு ரகமாக முந்திரி யில் உருவாக்கப் பட்டுள்ள இப்புதிய ரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய உகந்தது. பெரிய முந்திரி பருப்பு மற்றும் கொட்டைகள் கொண்டதாகவும் எளிதாக உடைக்கும் வண்ணம் இப்புதிய ரகம் தொடர் வேளாண்மை ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக ஆமணக்கு (ஒய்ஆர்சிஎச்.1): தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய ரகம் முந்தைய ரகத்தை காட்டிலும் 27 சதவீதம் அதிகளவு மகசூல் தரவல்லது. வீரிய ஒட்டு ரகமான இப்புதிய ரகம் குறைந்தளவு நீர்ப் பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய்ய ஏற்றது. 150 முதல் 160 நாட்கள் வரை கால அளவை கொண்ட இப்புதிய ரகம் 1861 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் மகசூல் தரவல்லது. (தகவல் . டாக்டர் தி.ராஜ்பிரவீன், விரிவுரையாளர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 608002)

0 comments: