Monday, September 14, 2009

முருங்கை மரம்

முருங்கை பல பயன்பாடுள்ள ஒரு மரமாகும். இதன் மரப் பட்டை, பிசின், இலை, பூ, காய், பிஞ்சு, கொட்டை என முருங்கையின் எல்லாப் பாகங்களுமே பயனுள்ளவை ஆகும்.முருங்கை ரோக நிவாரணி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், பல நோய்களுக்கு கைகண்ட மருந்து.

முருங்கை பல பயன்பாடுள்ள ஒரு மரமாகும். இதன் மரப் பட்டை, பிசின், இலை, பூ, காய், பிஞ்சு, கொட்டை என முருங்கையின் எல்லாப் பாகங்களுமே பயனுள்ளவை ஆகும்.முருங்கை ரோக நிவாரணி என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், பல நோய்களுக்கு கைகண்ட மருந்து.

வீட்டுக்குச் செல்வம் மாடு; தோட்டத்துக்குச் செல்வம் முருங்கைஎனப் பேசப் படுவதுண்டு. இந்த இரண்டும் இருந்தால் வறுமையே இருக்காது. அநேகமான வீடுகளின் கோடியில்(பின்புறம்) அல்லது எங்கோ ஓரிடத்தில் முருங்கை மரத்தைக் காணலாம்.


முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் வளர்க்கலாம். இதில் ஒட்டு வகைச் செடிகூட உண்டு. அந்த ஒட்டு வகையில் நீண்ட நல்ல சதைப்பற்றான காய்கள் காய்க்கக் கூடியதாக வளரும் உதாரணமாக, இந்தியாவில் விருத்தியாக்கப்பட்ட பிகே1 என்ற இன முருங்கை நீண்ட நல்ல சதைப்பற்றான காய்களையும், பெரிய உருசியான இலைகளையும் கொண்டதாகும். . அதிசய மரம் முருங்கை (1)என்ற கட்டுரை கூறுகிறது.

முருங்கை இலை (கீரை):

முருங்கை இலைகளில் இரும்புச் சத்து, கல்சியம் என்பன உண்டு.

இந்த இலைகளை எங்கள் வீட்டில் நல்லெண்ணையில் வறுத்துச் சாப்பிடுவோம்.. இவ்வாறு வறை செய்யலாம்; சலட்டுக்கு போடலாம்; சூப்புக்கும் போடலாம்.

முருங்கை இலையில்

தோடம் பழங்களிலும் பார்க்க 7 மடங்கு வைற்றமின் சீ

பாலைவிட 4 மடங்கு கல்சியம்

கரட்டை விட 4 மடங்கு வைற்றமின் ஏ

வாழைப்பழங்களிலும் பார்க்க 3 மடங்கு பொற்றாசியம்

பாலைவிட 2 மடங்கு புரதமும் உள்ளதாம் என அரிசோனாப்பல்கலைக்கழகத்தின் ஆய்வு(2) ஒன்று விளக்குகிறது.

முருங்கை இலைகளை அரைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு முகப் பருக்களில் பூசினால் பருக்களும், அதனால் ஏற்பட்ட கறுப்பு புள்ளிகளும் மறைந்துவிடுமாம் என அழகுக் குறிப்பு (3)ஒன்று சொல்கிறது

குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம்(4) இக்கீரையை விந்து கட்டிஎனப் பேசுகிறது.

முருங்கை இலையிலும், காயிலும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் சக்தி இருக்கிறது என இந்தான் மைசுறா, றேச்சல் பிலிப் (INTAN MAIZURA and RACHAEL PHILIP) என்பவர்களுடைய கட்டுரை(5) குறிப்பிடுகிறது. முருங்கைப் பூவும், காயும் ஆண்மை நரம்புகளை முறுகேற்றும் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

இதனால்தான் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு வில் இவை முக்கிய இடம் பெற்றிருக்கிறது போலும்.

காய்ந்த முருங்கை இலையில் நிறைய வைற்றமின் ஏ உண்டு என நம்பியார் வனிஷாவின் ஆராய்ச்சி (6)சொல்கிறது.

நூறு கிராம் காய்ந்த முருங்கை இலையில்

27 கி புரதம்

2,000 மி.கி் கல்சியம்

20.5 மி.கி் றைபோபிலவின்((Riboflavin)

17 மி.கி் வைற்றமின் C, V வைற்றமின் B,

அத்துடன் பலவித அமினோ அமிலங்களும் இருக்கின்றன என "அதிசய முருங்கை" என்ற கட்டுரை(1) குறிப்பிட்டுள்ளது.

முருங்கைப் பூவில் நல்ல சத்துகள் இருப்பினும், யாழ்ப்பாணதில் யாரும் சமைப்பதாக நான் அறியவில்லை. பூக்களைப் பறித்தால் காய்களைப் பெறமுடியாது என்பதுதான் காரணமாயிருக்கலாம்.

முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை சரக்குக் கறியாக புளி சேர்த்து சமைப்பபார்கள். காய்ச்சல் வந்தால், அல்லது மகப்பேற்றின் பின் உடனடியான பத்தியக் கறியாக அந்தத் தாய்க்கு கொடுப்பார்கள். தாய்க்குக் கொடுத்தால் பால் கூடச் சுரக்குமாம் . எங்கள் ஊரில் யாருக்காவது குழந்தை பிறந்தால் பிஞ்சு முருங்கைக்காய் வாங்க தேடித் திரிவார்கள். அதுவும் மாரி (மழை) காலம் என்றால் முருங்கைக் காய் கிடைப்பது குதிரைக் கொம்பாய்த்தான் இருக்கும். பொதுவாக மரக்கறி (சைவம்) சாப்பிடுவோர்தான் முருங்கைப் பிஞ்சு பத்தியகறி வைத்து பாலூட்டுந் தாய்க்கு கொடுப்பார்கள்.


முருங்கைக் காயில் பொஸ்பரஸ் , இரும்புச் சத்து, வைற்றமின் ஏ, சி, கல்சியம் என்பன உண்டு.முருங்கைக் காய் பிரட்டல் கறி, குழம்பு, சரக்குக் கறி எனக்கு ந்ன்றாகப் பிடிக்கும். இந்த சரக்குக் கறி பசியைத் தூண்டும்; மகப்பேறு காலங்களில தாய்க்கு கொடுத்தால் பால் கூடச் சுரக்கும் என "அதிசய முருங்கை" என்ற கட்டுரை(1) குறிபிடுகிறது . முருங்கைக் கயக் கறியைச் சாப்பிடும்போது சதைப் பற்றைக் கைவிரலால் காந்தி (காந்தல்) எடுத்தபின் சக்கையை மென்று அதன் சாற்றை உறிஞ்சும்போது நல்ல உருசியாக இருக்கும். பொதுப் பந்தியில் இப்படிச் சாப்பிடுவது அநாகரீகமாகத் தோன்றலாம், ஆனால் அதில் ஒரு தனி உருசி இருக்கிறது. அப்படி உண்டவர்க்குத்தான் அந்த உருசி எப்படி என்று தெரியும்.

முற்றிய முருங்கை காயை கரண்டியால் சுரண்டி எடுத்து வறை செய்து சாப்பிடலாம். வடகமும் செய்யலாம். இது மூளைக்கு நல்ல பலத்தைத் தரும். ஆனால் வயிற்றைக்கட்டும் (மலச்சிக்கல்) தன்மை இருப்பதால் எங்கள் வீட்டில் கத்தரிக்காயைச் சேர்த்துச் சமைப்பது வழக்கம்.

முருங்கைக் கொட்டைகளை மாவாக்கி(பொடியாக்கி) குடிநீரில் கலந்து வைத்தால் அந்த நீர் சுத்தமாகுமாம் என அருணாச்சலம் குமார் (professor of anatomy ) தன்னுடைய ஆராய்ச்சி(7) ஒன்றில் குறிப்பிடுகிறார்.

முருங்கைக் கொட்டைகளிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதன் பெயர் "பென்" எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய் சமையலுக்கும், வாசனைத்திரவியம் செய்யவும் பயன்படுகிறது. மணிக்கூடு செய்வோரும் இதைப் பாவிக்கிறார்கள் என பலடா- சாங் (M.C. Palada and L.C. Chang1) என்பவர்களுடைய ஆய்வு(8) கூறுகிறது..

முருங்கை பட்டையிலிருந்து நீல நிறச் சாயம் எடுக்கப்படுவாகவும் கூறப்படுகிறது . அரிசோனாப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு (2)ஒன்று விளக்குகிறது.

முருங்கை இலை, காய் என்பன " டயற் (diet)" இருப்போருக்கு மிகவும் பயனுள்ளவை என்பது என் கருத்தாகும். உடம்

முக்கிய குறிப்பு: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

0 comments: