கோவை வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய மூலிகைப் பூச்சி விரட்டியை அறிமுகம் செய்துள்ளனர்.
இது குறித்து மூலிகை பூச்சி விரட்டியை கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவிற்கு தலைமை வகித்த ஜெயராஜன் நெல்சன் கூறும் போது,
தமிழகத்தில் தொன்று தொட்டு அறியப்படும் வசம்பு செடியின் வேரில் இருந்து சாறு எடுக்கப்படுகிறது.
அதில், பீட்டா அசரோன் என்ற வேதிப் பொருள் உள்ளது. பூச்சிகளை விரட்டும் திறன் கொண்ட இந்த வேதிப் பொருளை பிரிந்தெடுத்து, தூள் வடிவில் செய்யப்படுகிறது. இந்தத் தூளை பூச்சி விரட்டியாகப் பயன்படுத்தலாம்.
நெற்பயிரை தாக்கும் நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்தும் இந்த மூலிகைப் பூச்சி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது என்று கூறினார்.
இந்தப் பூச்சி விரட்டியை தயாரிக்கும் உரிமத்தை "புவி கேர்' என்ற நிறுவனத்துக்கு வேளாண் பல்கலை. அளித்துள்ளது. உரிமம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தர் ப.முருகேசபூபதி தலைமை வகித்தார்.
பல்கலை. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநர் ரா.கணேசன், பதிவாளர் ப.சுப்பையன், பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் பி.சிவசுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Friday, September 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment