Saturday, September 26, 2009

மிளகாய் அதிக மகசூல் பெற....

மிளகாய் சாகுபடியிலதொழில் நுட்பத்தை கடைபிடித்தஅதிக மகசூல் பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பத்தை சரியாக கடைபிடித்து, மிளகாய் பயிரில் நல்ல மகசூல் பெறலாம். அதன்படி வடிகால் வசதியுடைய நிலத்தில் மிளகாய் பயிரிட வேண்டும். 24 மணி நேரத்திற்கு மேல் நீர் தேங்கி நின்றால் செடியின் வேர்கள் அழுகி விடும்.

கே-1, கே-2, கோ-1, கோ-3, பி.கே.எம்.-1 ஆகிய சம்பா ரகம் கோ-2 பி.எம்.கே-1, பி.எல்.ஆல்-1 ஆகிய குண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடி செய்யலாம்.

உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஹெக்டருக்கு ஒரு கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஹெக்டருக்கு 250 கிராம் வீதம் விதை பயன்படுத்தி நாற்று விட வேண்டும்.

மிளகாய் நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3 மீட்டர் நீளமும் 15 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு செண்டு நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இட வேண்டும்.

விதைகளை ஒரு கிலோவிற்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடர்மா விரிடி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பாத்திகளில் விதைகளை 2 சென்டி மீட்டர் ஆழத்தில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு வைக்கோல் அல்லது காய்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும். பின்பு பூவாளியின் உதவியால் நீர் ஊற்றி வர வேண்டும்.

நாற்றங்காலில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு ஒரு செண்டு நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணை மருந்தினை இட வேண்டும். இதனால் நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நிலத்தை 4 முறை உழுது கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு எரு கலந்து கடைசி உழவில் இட வேண்டும். உயர் விளைச்சல் ரகங்களுக்கு 40 X 45 X 30 சென்டி மீட்டர், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 60 X 75 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை தலா ஒரு கிலோ வீதம் 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதால் தழைச்சத்து மற்றும் மண்ணில் உள்ள கிடைக்காத மணிச்சத்து கிடைக்கும். இதனால் பயிர் நன்கு வேர் பிடிப்பதுடன் வேகமான வளர்ச்சி அடையும்.

பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 24 கிலோ மணிச்சத்து கிடைக்க 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து கிடைக்க 20 கிலோ மூரியேட்டா ஆப் பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும். அத்துடன் தழை சத்தினை 3 முறை பிரித்து இட வேண்டும். நடவு பயிரில் நட்ட 30,60,90 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் 30 கிலோ யூரியாவை பிரித்து இட வேண்டும்.

கோடை காலங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறையும், மழைக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறதண்ணீக் பாசனம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

0 comments: